Tuesday, March 16, 2004

உனக்கு அல்வா, எனக்கு அவள் - அத்தியாயம் 2A

(கடற்கரையில் கேட்ட ஒரு உரையாடல்)

வஸந்த்: பாஸ், நாம ரெண்டு பேரும் இந்த ஆளோட கதையில ஏதோ கெஸ்ட் ரோல்-ல வரப் போறோம்-னு ஒரே பேச்சா இருக்கே..!!

கணேஷ்: ஆமாடா.. எனக்கும் ஒண்ணுமே புரியலை.. கொஞ்ச நாள் முன்னாடி ஜெயமோகன் திண்ணையில 'தமிழின் மிகச் சிறந்த துப்பறியும் நாவல்'-ங்கிற பேர்ல நம்மளை துப்பறியும் சாம்பு, ஷெர்லாக் ஹோம்ஸ், ஜேம்ஸ் பாண்ட் இவங்க கூட எல்லாம் மோத விட்டு நக்கல் பண்ணாரு.. சரி, அவராவது ரைட்டர்.. ஏதோ பரவாயில்லைன்னு மன்னிச்சுடலாம்.. இந்த மாதிரி blog-ல எல்லாம் எழுதப்படற லெவலுக்குப் போயிட்டா நம்மளை யாரும் மதிக்கவே மாட்டாங்களே..!!

வஸந்த்: நம்ம ஆளு வேற நம்மளை கொஞ்ச நாளா ரொம்ப கண்டுக்கறதேயில்லை.. சரி, போனாப்போவுது, அட்லீஸ்ட் சிறீரங்கத்து ஜிகிடிகளைப் பத்தியாவது எழுதிக்கிட்டு இருக்காறே-ன்னு சந்தோஷமா இருந்தேன்.. அதுவும் நிறுத்திட்டாரு.. சின்னஞ்சிறு கதைகள்-னு இலக்கியம் வளர்க்கப் போயிட்டாரு.. ஒண்ணும் சரியில்லை பாஸ்..

கணேஷ்: சரி, கவலைப்படாதே.. நான் விசாரிச்சுப் பாத்தேன்.. இந்த ஆளும், நம்ம ஆள் படிச்ச எம்.ஐ. டி.-யில தான் படிச்சாராம்.. அந்த மட்டில ஏதோ கொஞ்சம் கௌரவமான ரோல் குடுப்பார்-னு எதிர்பார்க்கலாம்..

வஸந்த்: ஒரு வேளை blog-க்கு தமிழ்-ல என்னாங்கிற பிரச்சினையை ஸால்வ் பண்ண கூப்பிட்டா கதை கந்தலாயிடும்..

கணேஷ்: அப்படியெல்லாம் நடக்கக்கூடாது-ன்னு உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கோ..

வஸந்த்: அவங்க தான் ரீஸண்ட்டா கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டாங்களே..!! சரி, என்ன தான் நடக்குதுன்னு பாத்துருவோம்.. இனிமே சிம்ரனாத்தா விட்ட வழி..

(தொடரும்..)